நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்த வழக்கு முடிவதற்குள் நான் இறந்து விடலாம்: துன் மகாதீர்

ஷாஆலம்:

இந்த வழக்கு முடிவதற்குள் நான் இறந்துவிடலாம் என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

துன் மகாதீர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக தாக்கல் செய்த 150 மில்லியன் ரிங்கிட் வழக்கு இன்று பதற்றத்தை ஏற்படுத்தியது.

நீதிமன்றத்தில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் அவர் அதிருப்தி அடைந்தார்.
குறுக்கு விசாரணையில், அன்வாரின் வழக்கறிஞர் ரஞ்சித் சிங்,

நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த 2020 ஆம் ஆண்டில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து மகாதீரிடம் கேள்வி எழுப்பினார்.

அனைத்து வேட்பாளர்களும் தங்கள் வைப்புத்தொகையை இழந்த 15ஆவது பொதுத் தேர்தலில் மகாதீரின் அப்போதைய கட்சியான பெஜுவாங்கின் மோசமான செயல்திறனையும் ரஞ்சித் எடுத்துக்காட்டினார்.

இதில் வெளிப்படையாகவே அதிருப்தி அடைந்த மகாதீர், குற்றச்சாட்டுகளை நிராகரித்து, அவதூறு வழக்கின் முக்கியப் பிரச்சினையில் பாதுகாப்புக் குழு கவனம் செலுத்த வேண்டும்.

அன்வார் என்னை அவதூறு செய்ததாக நான் அளித்த புகாருக்கும் இந்தக் கேள்விக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன் என்று மகாதீர் நீதிபதி டொனால்ட் ஜோசப் பிராங்க்ளினிடம் கூறினார்.

நான் நல்லவனா இருந்தாலும் சரி, கெட்டவனா இருந்தாலும் சரி, நான் ஒரு குற்றம் செய்தால் அதை ஏற்றுக்கொள்கிறேன்.

அன்வார் என் மீது குற்றம் சாட்டினார்.

பணத்தைத் திருடி  என்னையும் என் பிள்ளைகளையும் பணக்காரர்களாக்கினேன். வெளிநாடுகளுக்குப் பணத்தை மாற்றினேன் என்றார்.

இந்தக் குற்றச்சாட்டுகள்தான் என் மீதான குற்றச்சாட்டுகளை அவதூறாகக் கருதுகின்றன.

மேலும் குறுக்கு விசாரணை தனது ஆளுமை குறித்த கேள்விகளுக்கு மாறியதில் ஏமாற்றம் அடைகிறேன்.

நான் ஒரு வழக்கறிஞர் இல்லை. ஆனால் தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்று நான் நம்புகிறேன்.

இந்த வழக்கு தீர்க்கப்படுவதற்குள் நான் இறந்துவிடலாம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset