நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேராக்கில் திடீர் வெள்ளம்: இன்றிரவு 3 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டன

ஈப்போ:

லாருட், மாத்தாங், செலாமா ஆகிய மாவட்டங்கள், மஞ்சோங் ஆகியவற்றை உள்ளடக்கிய இன்று காலை முதல் பெய்த கனமழையைத் தொடர்ந்து பேராக்கில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இரவு 9 மணி நிலவரப்படி 44 குடும்பங்களைச் சேர்ந்த 180 பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க மூன்று தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

சிம்பாங் ஹால்ட் பொது மண்டபத்தில் நிவாரண மையம் இரவு 7.30 மணிக்கு திறக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களை வெளியேற்றும் செயல்முறை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என்று பேர  மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின்  செயலகம் தெரிவித்துள்ளது.

மஞ்சோங் மாவட்டத்தைப் பொறுத்தவரை,

கம்போங் சுங்கை பத்து, கம்போங் நெலாயானில் உள்ள வீடுகளில் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, 44 குடும்பங்களைச் சேர்ந்த 180 பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க, சுங்கை பத்து பள்ளியில் நிவாரண மையம்  இரவு 8 மணிக்கு திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset