
செய்திகள் மலேசியா
தேசிய முன்னணியை விட்டு வெளியேறும் முடிவை மஇகா இன்னும் எடுக்கவில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்:
தேசிய முன்னணியை விட்டு வெளியேறும் முடிவை மஇகா இன்னும் எடுக்கவில்லை.
அக்கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் இதனை கூறினார்.
இவ்விவகாரத்தில் கட்சி தலைமைத்துவம் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை.
இவ்விவகாரத்தில் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் உட்பட மஇகா உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த உரிமைகள் உள்ளது.
இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒருமித்த கருத்துடன் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
கட்சியின் வழிகாட்டுதல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஒரு குறிப்பிட்ட நபருக்கு சொந்தமானது அல்ல.
கட்சி தேசிய முன்னனியில் நீடிக்குமா அல்லது வேறு முடிவை எடுக்குமா என்பது வரும் நவம்பர் 16 அன்று நடைபெறும் மஇகா பொதுக் கூட்டத்தில் இறுதி செய்யப்படும்.
கட்சியின் வழிகாட்டுதல் குறித்த முடிவு தனிப்பட்ட கருத்து அல்ல.
இருப்பினும் துணைத் தலைவர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் கட்சி தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளிலும் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க உரிமை உண்டு.
ஆனால் கட்சியின் எதிர்கால திசை போன்ற விஷயங்களில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
எனவே தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவதா இல்லையா என்பது குறித்த இறுதி முடிவு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
அடுத்த மாதம் மஇகா தேசிய முன்னணியை விட்டு வெளியேறும் என்று கூறப்படும் முன்னாள் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ தாஜூடிதன் அப்துல் ரஹ்மான் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 23, 2025, 10:20 pm
வண்ணச்சாயங்களில் உள்ள காரீயம் நீக்க ஒழுங்குமுறை நடவடிக்கைகள் தேவை: பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்
October 23, 2025, 6:14 pm
மஇகா வலுவான மலாய் கட்சிகளுடன் இருக்க வேண்டும்; அம்னோவை மட்டும் நம்பியிருக்க முடியாது: ஷாபுடின்
October 23, 2025, 5:51 pm
சபா இனனம் தொகுதி இந்தியர்களுடனான தீபாவளி கொண்டாட்டம் மகிழ்ச்சியளிக்கிறது: டத்தோஸ்ரீ ரமணன்
October 23, 2025, 5:23 pm
பேரிடர் உதவிகளை நிறத்திற்கு ஏற்ப விநியோகிக்கும் மாநில அரசுகளின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது: ஜாஹித்
October 23, 2025, 5:11 pm
மொஹைதின் மருமகனின் கடப்பிதழ் ரத்து செய்யப்பட்டுள்ளது: சைபுடின் நசுதியோன்
October 23, 2025, 4:25 pm