நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகா வலுவான மலாய் கட்சிகளுடன் இருக்க வேண்டும்; அம்னோவை மட்டும் நம்பியிருக்க முடியாது: ஷாபுடின்

கோலாலம்பூர்:

மீண்டும் முக்கியத்துவம் பெற மஇகா வலுவான மலாய் கட்சிகளுடன் இருக்க வேண்டும்.

அம்னோவை மட்டும் நம்பியிருக்க முடியாது என்று அரசியல் பார்வையாளர் ஷாபுடின் ஹுசைன் இதனை கூறினார்.

தேசிய முன்னணியை விட்டு வெளியேற மஇகா எடுத்த முடிவு சரியான முடிவாகக் கருதப்படுகிறது.

இதனால் இந்தியக் கட்சியான மஇகா மீண்டும் வலுவாகவும் முக்கியத்துவமாகவும் மாற முடியும்.


உண்மையில் தற்போதுள்ளதை விட சிறந்த செயல்திறனை அடைய மஇகாவும் அதே நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

அம்னோ இனி மலாய்க்காரர்களுக்கு வலுவான கட்சியாக இல்லாததால், மஇகா வெற்றி பெற அம்னோவை நம்பியிருக்க முடியாது.

மறுபுறம் அம்னோவின் இடத்தை  தற்போது பாஸ், பெர்சத்து கட்சிகள் கைப்பற்றி விட்டன.

கடந்த 15ஆவது பொதுத் தேர்தலில் மலாய் வாக்காளர்களின் ஆதரவில் சுமார் 70 சதவீதத்தை அக்கட்சிகள் கைப்பற்றியுள்ளன.

பாஸ், பெர்சத்துவின் ஆதரவுடன் மட்டுமே மஇகா ஒரு காலத்தில் வலுவான அம்னோவின் ஆதரவைப் பெற்றபோது பெற்ற அளவுக்கு அதிகமான இடங்களை மீண்டும் வெல்ல முடியும் என்று அவர் தனது முகநூல் வாயிலாக கூறினார்.

தேசிய முன்னணியை விட்டு வெளியேறும் சாத்தியத்தைத் தொடர்ந்து மஇகாவை சிறுமைப்படுத்திப் பேசிய சில கட்சிகளின் செயல்களைப் பற்றி ஷாபுடின் கூறுகையில்,

அம்னோ தற்போது முன்பு போல வலுவான கட்சியாக இல்லை என்றார்.

கடந்த காலத்தில் இருந்து அம்னோ இப்போது மிகவும் வேறுபட்டுள்ளது.

கூட்டணியில் முக்கிய கட்சியாக இருக்கும் அம்னோ அதன் பலத்தை இழந்திருப்பதே தேசிய முன்னணி அதிகார இழப்புக்கு ஒரு காரணம் என்றும் அவர் விளக்கினார்.

அம்னோ இனி அரசாங்கத்தை வழிநடத்தும் திறன் கொண்டதாக இல்லை.

நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, அது மற்ற இரண்டு மலாய் கட்சிகளை விட மூன்றாவது இடத்தில் உள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset