நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இது கணவனின் தவறு: காதலனின் பிறப்புறுப்பை வெட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட வங்காளதேசப் பெண் இவ்வாறு பதிலளித்தார்

ஜொகூர் பாரு:

இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது காதலனின் பிறப்புறுப்பை வெட்டியது தொடர்பில் கைது செய்யப்பட்ட வஙகாளதேச பெண் ஒருவர் இன்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிபதி டத்தோ அகமது கமல் அரிஃபின் இஸ்மாயில் முன் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

34 வயதான பேகம் மாசுமா ஆரம்பத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

ஆனால் அது நிபந்தனையுடன் செய்யப்பட்டதாலும், குற்றம் சாட்டப்பட்டவர் குற்றச்சாட்டில் சிறிதளவு மட்டுமே புரிந்து கொண்டதாலும் நீதிமன்றம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

எனக்கு கொஞ்சம் கொஞ்சம் புரிகிறது. இது கணவரின் தவறு என்று குற்றம் சாட்டப்பட்டவர் கூறினார்.

கத்தியை ஆயுதமாகப் பயன்படுத்தி மரணம் ஏற்படக்கூடிய அளவிற்கு  வேண்டுமென்றே பாபு மோண்டோலுக்கு பலத்த காயம் ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset