நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெடாவில் 7 ஆறுகளின் நீர் நிலை அபாய கட்டத்தை தாண்டின: பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின

அலோர்ஸ்டார்:

கெடாவில் 7 ஆறுகளின் நீர் நிலை அபாய கட்டத்தை தாண்டியதால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

இன்று பெய்த  தொடர் மழையைத் தொடர்ந்து மாநிலத்தில் ஏழு ஆறுகள் அபாய அளவைத் தாண்டிவிட்டன.

பொது வெள்ளத் தகவலின் அடிப்படையில்,

சிக், யான், பாலிங், பெண்டாங், பந்தர் பஹாரு மாவட்டங்களை உள்ளடக்கிய அனைத்து ஆறுகளும் இருப்பதாக நீர்ப்பாசனம், வடிகால் துறை தெரிவித்துள்ளது.

அனைத்து ஆறுகளும் மேல்நோக்கிய போக்கைக் காட்டுகின்றன.

இதற்கிடையில், சமூக ஊடகங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் மாநிலத்தின் கோடியாங்,  சங்லுன், குபாங் பாசு, கூலிம், பெண்டாங், சிக் போன்ற மாவட்டங்களில் உள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்



தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset