நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா இனனம் தொகுதி இந்தியர்களுடனான தீபாவளி கொண்டாட்டம் மகிழ்ச்சியளிக்கிறது: டத்தோஸ்ரீ ரமணன்

கோத்தா கினபாலு:

சபா இனனம் தொகுதி இந்தியர்களுடனான தீபாவளி கொண்டாட்டம் மகிழ்ச்சியளிக்கிறது.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

சபாவின் இனனம் சட்டமன்றத் தொகுதி இந்திய சமூகத்துடன் தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

கம்போங் டாமாய், ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் தலைவர் டத்தோஸ்ரீ ராஜேந்திரன், கோயில் தலைமைத்துவம் என்னை அன்புடன் வரவேற்றனர்.

இந்த அர்த்தமுள்ள கொண்டாட்டத்தில் உள்ளூர் இந்திய சமூகத்தினருடன் இணைவதற்கு முன்பு நான் ஒரு பிரார்த்தனை நிகழ்விலும் கலந்து கொண்டேன்.

சிலாங்கூர் மாநில தேர்தல் இயக்குநர் டாக்டர் சத்தியா பிரகாஷ்; இனனம் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ பெட்டோ கலிம், கெஅடிலான் தோழர்களும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், சபா உட்பட இந்திய சமூகத்தின் நம்பிக்கை, நல்வாழ்வை தொடர்ந்து உறுதி செய்வதற்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டை நான் வலியுறுத்தினேன்.

ஏனென்றால், இந்த மடானி குடும்பத்திற்கு எல்லைகள் எதுவும் தெரியாது.

ஒற்றுமை, அன்பின் உணர்வோடு தீபாவளியின் தீபங்களை ஒன்றாக ஏற்றி வைப்போம் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset