நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலகத் தலைவர்கள் ஒன்று கூடுகிறார்கள்; முக்கியமான வேலை இல்லையென்றால் கோலாலம்பூருக்குள் நுழைய வேண்டாம்: ஐஜிபி

கோலாலம்பூர்:

முக்கியமான வேலை இல்லையென்றால் மக்கள் கோலாலம்பூருக்குள்  நுழைய வேண்டாம்.

தேசிய போலிஸ்படைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலித் இஸ்மாயில்  இதனை தெரிவித்தார்.

47ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் உலகத் தலைவர்கள் பலர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் வரும் அக்டோபர் 26 முதல் 28 வரை முக்கியமான வேலைகள் இல்லையென்றால்  தலைநகருக்குள் நுழைவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.

மாநாடு முழுவதும் அனைத்துலக பிரதிநிதிகளின் சீரான இயக்கத்தை உறுதி செய்வதற்காக, அவ்வப்போது சாலை மூடல்கள், மாற்றுப்பாதைகள் செயல்படுத்தப்படும்.

கடந்த அக்டோபர் 17 முதல் சாலை மூடல்கள் படிப்படியாகத் தொடங்கப்பட்டுள்ளது.

மாநாட்டிற்கு முன்னதாகவும், மாநாட்டின் போதும், குறிப்பாக அரசாங்கத் தலைவர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளின் போது இது அதிகரிக்கப்படும்.

அத்தியாவசிய வேலைகள் இல்லாவிட்டால் நகர மையத்தைத் தவிர்ப்பதுடன் உங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.

குறிப்பாக பொது போக்குவரத்தைப் பயன்படுத்தவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset