நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

வீராங்கனைக்கு தொற்று: தென் கொரியாவில் தனிமைப்படுத்தப்பட்ட மலேசிய மகளிர் ஹாக்கி குழு

கோலாலம்பூர்:

வீராங்கனை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மலேசியா மகளிர் ஹாக்கி குழு தென்கொரியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

தென்கொரியாவில் நடைபெறும் ஆசிய மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க மலேசிய அணி கடந்த நவம்பர் 29ஆம் தேதி அங்கு சென்றது. இதையடுத்து, அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையின்போது நூருல் ஃபயிஸா ஷஃபிகா கலீம் (Nurul Faezah Shafiqah Khalim) என்ற மலேசிய வீராங்கனைக்கு தொற்று பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

இதனால் மலேசிய அணி டிசம்பர் 1ஆம் தேதி முதல் தனிமைப்படுத்தப்பட்டதுடன், இன்று சீன அணியுடன் மலேசியா மோத இருந்த போட்டியும் கைவிடப்பட்டது.

MHC on Twitter: "TNB Piala Tun Abdul Razak 2019 - 24 September 2019  Kumpulan B (Wanita) Terengganu 1-2 Melaka 23' FG Nurul Faezah Shafiqah  Khalim 25' FG Nur Aisyah Yaacop 32' PS

இந்நிலையில், மலேசிய ஹாக்கி கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தங்கள் அணியைச் சேர்ந்த நூருல் ஃபயிஸா ஷஃபிகா கலீம் உட்பட அனைத்து வீராங்கனைகளும் தொற்றுக்கான அறிகுறிகள் இன்றி நலமாக இருப்பதாகவும், மலேசிய அணி ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ந்து விளையாட ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு வழிகாண வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே வேளையில், ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு வெளியிட்ட மற்றொரு அறிக்கையில் டிசம்பர் 5 மற்றும் 6ஆம் தேதிகளில் மலேசிய அணி எந்த போட்டியிலும் பங்கேற்காது எனக் கூறியுள்ளது.
மலேசிய அணியை நடப்பு போட்டியில் பங்கேற்க வைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset