நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

23 வயதுக்கீழ்ப்பட்ட ஆசிய கிண்ண காற்பந்து போட்டி: குவைத் 2-1 மலேசியா 

டோஹா: 

கத்தாரில் நடைபெற்று வரும் 23 வயதுக்கீழ்ப்பட்ட ஆசிய கிண்ண காற்பந்து போட்டியில் மலேசியா குவைத் அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. 

ஸ்டேடியம் அல்- ஜோனுப் அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மலேசியா தோல்வி அடைந்தது. குவைத் அணி இந்த ஆட்டம் வாயிலாக மூன்று புள்ளிகளை வெற்றிக்கொண்டது. 

இதனால் டி குழு நிலையிலான அனைத்து ஆட்டங்களிலும் மலேசியா தோல்வியை மட்டுமே தழுவியது. மலேசியாவின் மோசமான அடைவுநிலை காரணமாக மலேசிய காற்பந்து ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

முரட்டுத் தனமாக விளையாடியதால் மலேசிய அணியின் கோல் காவலருக்குச் சிவப்பு அட்டை வழங்கப்பட்டது. மலேசியா பத்து பேருடன் விளையாடியது. இருப்பினும் வெற்றிப்பெற முடியாமல் போனது. 

இறுதி நிமிடத்தில் கூடுதலாக 10 நிமிடங்கள் வழங்கப்பட்டாலும் மலேசியா அணியின் கோல் புகுத்தும் முயற்சிகள் யாவும் தோல்வியில் முடிந்தன.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset