நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி- லிவர்பூல் தோல்வி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி பெற்ற வேளையில் லிவர்பூல் தோல்வி கண்டது.

ஓல்டு டிராப்போர்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் சிப்பீல்டு யுனைடெட் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 4-2 என்ற கோல் கணக்கில் சிப்பீல்டு யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மென்செஸ்டர் யுனைடெட் அணிக்காக புருனோ பெர்னாண்டஸ் இரு கோல்களை அடித்தார்.

மற்ற கோல்களை ஹாரி மிக்வேய்ர், ராஸ்மஸ் ஆகியோர் அடித்தனர்.

கோட்டிசன் பார்க் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 0-2 என்ற கோல் கணக்கில் எவர்ட்டன் அணியிடம் தோல்வி கண்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

மற்ற ஆட்டங்களில் கிறிஸ்டல் பேலஸ், ஏஎப்சி போர்னமௌத் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset