நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

டி.20 உலகக் கிண்ணம்: இந்திய அணியின் புரோமோ வெளியீடு

புதுடெல்லி:

ஐ.சி.சி. டி20 உலகக் கிண்ணப் போட்டி வரும் ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.

இதற்கிடையே, டி20 உலகக் கிண்ணப் போட்டிகான இந்திய அணியைத் தேர்வு செய்வதற்கான கூட்டம் வரும் 27-ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.

இதில் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், பும்ரா, ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோரின் தேர்வு உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், டி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான இந்திய அணியின் புரோமோ இன்று வெளியிடப்பட்டது. 

இந்தப் புரோமோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset