நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பொது இடத்தில் தொழுகை நடத்த குருகிராமில் தொடரும் எதிர்ப்பு

குருகிராம்:

இந்தியாவின் தொழில் நகரமான குருகிராமில் பொது வெளியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்துவதற்கு ஹிந்துக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வாரந்தோறும் போலீஸாரின் பாதுகாப்பில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினாலும், ஹிந்துக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அப்போது iஹிந்துக்கள் ஒன்றுகூடி தொழுகை நடத்தும் இஸ்லாமியர்களுக்கு எதிராக அவர்கள் யாகம் நடத்துகிறார்கள்.

குருகிராமில் பணியாற்றும் இஸ்லாமியர்களுக்கு வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த போதிய பள்ளிவாசல்கள் இல்லாததால் அங்குள்ள பூங்கா, விளையாட்டு திடல்களில் தொழுகை நடத்தி வருகிறார்கள்.

அவர்கள் தொழுகை நடத்த சீக்கியர்கள் இடமளிக்க முன்வந்தனர். ஆனால் அங்கும் ஹிந்துக்கள் சென்று எதிர்ப்பு தெரிவித்தால், அசம்பாவித சம்பவம் நடைபெற கூடாது என இஸ்லாமியர்கள் சீக்கியர்களின் உதவிக்கு நன்றி தெரிவித்து வந்துவிட்டனர்.

முன்னதாக, உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பால் குருகிராமில் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்று வந்த  37 பொது இடங்களை 8-ஆக குருகிராம் நிர்வாகம் குறைத்தது. அங்கு மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் தொழுகை நடத்தப்பட்டு வருகிறது.

இதனால் வெள்ளிக்கிழமைதோறும் அப் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்தப் பிரச்சனைக்கு உடனடியாக அரசு தீர்வு காணாவிட்டால் பெரும் மோதல் ஏற்படும் நிலை உருவாகிவிடும் என்று அப்பகுதிவாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset