நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பட்டாசு விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை நேரில் பார்த்தேன்; ஒருவர் 5 விரல்களையும் இழந்து துடித்தார்; இந்த தீபாவளி சோகமாக மாறியது: பசுபதி

கூலிம்:

இந்த ஆண்டு தீபாவளி ஒரு மகிழ்ச்சியான தீபத் திருவிழாவாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் பட்டாசு விபத்தில் சிக்கியதால் அது ஒரு சோகமாக மாறியது என்று 74 வயதான பசுபதி ரத்னம் கூறினார்.

நேற்று நள்ளிரவில் ஜாலான் பாயா பெசாரில் தீபாவளி கொண்டாட்டத்துடன் இணைந்து நடந்த பட்டாசு வெடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 22 பேரில் இவரும் ஒருவர்.

அவரைப் பொறுத்த வரை, இந்த சம்பவத்தால் அவர் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.

குறிப்பாக சம்பவத்தின் போது மக்கள் அலறிக் கொண்டு இங்கும் அங்கும் ஓடியதையும், ஐந்து விரல்களை இழந்ததையும் பீதியின் சூழலையும் தனது கண்களால் நேரில் பார்த்தேன்.

இந்த விபத்தில் எனக்கு வலது கையில் முறிவு ஏற்பட்டுள்ளது

உடலின் பல பாகங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன என்று இன்று கூலிம் மருத்துவமனையில் சந்தித்தபோது அவர் கூறினார்.

வெடிப்பு தான் நின்ற இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் ஏற்பட்டது என்றார் அவர்.

ஆனால் அதன் தாக்கம் இன்னும் தன்னை இடிந்து விழும் அளவுக்கு வலுவாக இருந்ததாக பசுபதி கூறினார்.

பட்டாசு திடீரெனவும் பலமாகவும் வெடித்தது. அது மாற்றியமைக்கப்பட்டிருக்கலாம். 

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க போலிசார் விசாரணை நடத்துவார்கள் என்று நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset