நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோஸ்ரீ சரவணனின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு: முன்னாள் பிரதமர்கள் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்

கோலாலம்பூர்:

டத்தோஸ்ரீ சரவணனின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் முன்னாள் பிரதமர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நாடடில் வாழும் இந்து மக்கள் இன்று தீபாவளித் திருநாளை பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் இல்லத்தில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு விமரிசையாக நடைபெற்றது.

காலை முதல் அதிகமானோர் இந்த திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டனர்.

முன்னாள் பிரதமர்களான டான்ஸ்ரீ மொஹைதின் யாசின், டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஆகியோர் இந்த திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து சிறப்பித்தார்.

மேலும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சூர், வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான், உயர் கல்வியமைச்சர் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காடிர், முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின், மசீச தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங், டத்தோஸ்ரீ அஸ்மின் அலி, கிரீன் பேக்கேட் தலைமை இயக்குநர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத்  உட்பட பல தலைவர்கள் இத் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டனர்.

பல பணிகளுக்கு மத்தியில் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் தனது நன்றி என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset