நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெடாவில் தீபாவளி பட்டாசுகள் வெடித்ததில் 22 பேர் காயம்

கோலாலம்பூர்:

நேற்று நள்ளிரவு கெடாவின் கூலிமில் உள்ள பாயா பெசாரில் தீபாவளி கொண்டாட்டங்களின் போது பட்டாசுகள் வெடித்ததில் சுமார் 22 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

நள்ளிரவு 12.45 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக கூலிம் மருத்துவமனைக்கு விரைந்ததாக கோஸ்மோ ஊடகம் தெரிவித்துள்ளது. 

காயமடைந்தவர்களுக்கு தலை, முகம், உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

வானவேடிக்கை நிகழ்ச்சியைக் காண கூடியிருந்த பார்வையாளர்களின் கூட்டத்தின் கீழ் திடீரென பட்டாசுகள் வெடித்ததாக அறியப்படுகிறது.

இந்த சம்பவத்தின் பல படங்கள், வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset