
செய்திகள் மலேசியா
பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை: 14 வயது மாணவனுக்கு இரண்டாவது முறையாக காவல் நீட்டிப்பு
கோலாலம்பூர்:
பண்டார் உத்தாமாவில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் நடந்த கத்திக்குத்து விசாரணைக்கு உதவுவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள 14 வயது மாணவனின் காவல் நாளையுடன் முடிவடைகிறது.
நாளை காலை 8 மணிக்கு பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அந்த மாணவனுக்கு இரண்டாவது முறையாக காவல் நீட்டிக்கப்படும் என்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைமை உதவி ஆணையர் ஷம்சுடின் மமத் தெரிவித்தார்.
விசாரணைக்கு உதவுவதற்காக இதுவரை 148 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
"விசாரணை ஆவணங்கள் முதல் முறையாக துணை அரசு வழக்கறிஞரின் அறிவுறுத்தல்களுக்காக நாளை பரிந்துரைக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக, காவல்துறையின் கோரிக்கையை நீதிபதி ஷாரில் அனுவர் அஹ்மது முஸ்தஃபா அங்கீகரித்த பின்னர், அந்த மாணவன் ஏழு நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டார்.
சந்தேக நபர், படிவம் ஒன்று மாணவர் ஆவார். தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் அவர் விசாரிக்கப்படுகிறார்.
இந்த சம்பவம் அக்டோபர் 14 ஆம் தேதி காலை 9.10 மணியளவில் நடந்தது. அப்போது 16 வயது மாணவியின் உடலில் பலமுறை கத்திக் குத்தப்பட்டு அவர் இரத்த வெள்ளத்தில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
October 20, 2025, 12:48 pm
கத்திக்குத்து சம்பவத்தில் பலியான மாணவி யாப் ஷிங் சூயென் சவ ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்
October 20, 2025, 11:19 am
கெடாவில் தீபாவளி பட்டாசுகள் வெடித்ததில் 22 பேர் காயம்
October 19, 2025, 11:33 pm
தீபாவளி திருநாள் அனைவருக்கும் வளர்ச்சியையும் மேம்பாட்டையும் கொண்டு வர வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
October 19, 2025, 10:16 pm