நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்கள் அமைதியை நோக்கி ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் தீபாவளி வாழ்த்துகள்

கோலாலம்பூர்:

மக்கள் அமைதியை நோக்கி ஒன்றிணைய வேண்டும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது  தீபாவளி வாழ்த்து செய்தியில் இவ்வாறு கூறினார்.

நாட்டில் தீபாவளியை கொண்டாடும்  அனைத்து இந்துக்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

இந்த ஆண்டு தீபாவளி, மலேசியர்கள் முன்னேற்றம், ஞானம், நீதி ஆகியவற்றை நோக்கி ஒன்றிணைந்து இருளையும் ஒடுக்குமுறையையும் விட்டுச் செல்வதற்கான அடையாளமாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தீபாவளி மலேசிய குடும்பங்களுக்கு ஞானத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும் என்று நம்புகிறேன்.

தீபங்களின் திருவிழா என்றும் அழைக்கப்படும் தீபாவளி, நாளை கொண்டாடப்படுகிறது.

இத்திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் அமைதியையும் தர வேண்டும் என பிரதமர் காணொளி வாயிலாக தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset