நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஒமிக்ரானால் தென் ஆப்ரிக்காவில் 4-ஆவது அலை

கேப் டவுன்:

ஒமிக்ரான் வகை கொரோனாவால் தென் ஆப்பிரிக்காவில் 4ஆவது அலை எழுந்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் ஜோ பாஹ்லா கூறுகையில்,
ஒமிக்ரான் வேகமாகப் பரவும் தன்மை காரணமாக, நாடு முழுவதும் 4ஆவது கொரோனா அலை எழுந்துள்ளது.

நாட்டின் 9 மாகாணங்களில் அந்த வகை கொரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

எனினும், இந்த புதிய அலையால் அதிக உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று நம்புகிறோம்.

ஒமைக்ரானை எதிர்கொள்ள இன்னும் சில நாள்களுக்கு கடுமையான பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை அறிவிக்காமலேயே நம்மால் சமாளிக்க முடியும். எனினும், பொதுமக்கள்  தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றார்.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24ஆம் தேதி முதல்முறையாகக் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து, டென்மார்க், ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா, ஹாங்காங், கனடா, தென் கொரியா, ஜப்பான், பிரான்ஸ், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, சிங்கப்பூர் உள்பட சுமார் 40 நாடுகளுக்கும் பரவியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset