நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

150 பேருக்கு தீபாவளி உதவிப் பொருட்கள்; 50ஆவது ஆண்டில் கால்பதிக்கிறது ஜெயபக்தி: டத்தோ செல்வராஜூ

கோலாலம்பூர்:

ஜெயபக்தி நிறுவனம் அடுத்தாண்டு 50ஆவது ஆண்டில் கால்பதிக்க உள்ளது என அந்நிறுவனத்தின் தலைவர் டத்தோ கு. செல்வராஜூ இதனை பெருமையுடன் கூறினார்.

தீபாவளியை வசதி குறைந்தவர்கள் சிரமமின்றி கொண்டாடுவதை உறுதிப்படுத்தும் வகையில் ஜெயபக்தி நிறுவனம் இவர்களுக்கு உணவு பொருட்களை வழங்கியது.
கிட்டத்தட்ட 150 பேருக்கு ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு. செல்வராஜூ உதவிப் பொருட்களை வழங்கினார்.

இத்தருணத்தில் வசதி குறைந்தவர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக சுற்று வட்டார இந்தியர்களுக்கு இந்த அன்பளிப்புகளைத் தாங்கள் வழங்கி வருவதாக டத்தோ செல்வராஜூ குறிப்பிட்டார்.

இத்தீபத் திருநாளின் ஒளி அனைவரின் இல்லங்களிலும் வீசட்டும். அவர்களின் முகத்தில் சந்தோஷம் பெருகட்டும்.

இதுபோன்ற நிகழ்ச்சியை இனி வரும் காலங்களிலும் நாங்கள் தொடர்வோம்.

வாசிப்புக்கு முக்கியத்துவம் அளித்து கடந்த 49 வருடங்களாக ஜெயபக்தி நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

அடுத்தாண்டு 50ஆவது ஆண்டில் ஜெயபக்தி கால்பதிக்க உள்ளது.

இது ஜெயபக்தி நிறுவனத்தின் சாதனையாகும் என்று டத்தோ செல்வராஜூ கூறினார்.

முன்னதாக இந்நிகழ்ச்சியில்  பிரதமரின் அரசியல் செயலாளர் டத்தோ அஸ்மானின் செயலாளர் ஜோனதன் வேலா, மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் செ. வே. முத்தமிழ் மன்னன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset