நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீப ஒளி பெண் தொழில் முனைவோருக்கு முன்னேற்றத்தை கொண்டு வரட்டும்: ஹேமலா

கோலாலம்பூர்:

தீப ஒளி பெண் தொழில் முனைவோருக்கு முன்னேற்றத்தையும் மேம்பாட்டையும் கொண்டு வரட்டும்.

மைக்கியின் மகளிர் பிரிவுத் தலைவர் ஹேமலா சிவம் இதனை கூறினார்.

தீபாவளி கொண்டாடும் அனைத்து இந்து பெருமக்களுக்கும் என வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தீபாவளியை அனைவரும் மகிழ்ச்சியுடனும் குடும்பத்தாருடன் கொண்டாட வேண்டும்.

அதே வேளையில் இந்த தீபாவளி அனைவருக்கும் மேம்பாட்டையும் வளர்ச்சியையும் கொடுக்க வேண்டும்.

குறிப்பாக பெண் தொழில் முனைவர்கள் வாழ்க்கையிலும் வணிகத்திலும் வெற்றி பெற வேண்டும்.

இந்திய பெண் வணிகர்களின் மேம்பாட்டிற்காக அமானா இக்தியாரின் பெண் திட்டம் உட்பட பல திட்டங்களை அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்.

ஆக மொத்தத்தில் இந்த தீபாவளி அனைவருக்கும் புதிய ஒளியை தரட்டும் என்று ஹேமலா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset