நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொழிலாளர்கள் மாற்றத்தில் மலேசியா வட்டாரத் தலைவராக உள்ளது: சையத் அல்வி

கோலாலம்பூர்:

தொழிலாளர் மாற்றத்தில் மலேசியா வட்டாரத் தலைவராகவும் முன்னோடியாகவும் உள்ளது.

எச் ஆர்டி கோர்ப் தலைமை நிர்வாக அதிகாரி சையத் அல்வி முகமது சுல்தான் இதனை கூறினார்.

மலேசியா தற்போது பணியாளர் மாற்றத்தில் ஒரு வட்டாரத் தலைவராக வளர்ந்து வருகிறது.

எச் ஆர்டி கோர்ப் எனப்படும் மனிதவள மேம்பாட்டுக் கழகத்தால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தென்கிழக்கு ஆசியா முழுவதும் ஒரு எடுத்துக்காட்டாகவும் ஆய்வாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

ஆசியான் திறன் ஆண்டு 2025 மூலம் மலேசியாவின் முயற்சிகள் மற்ற நாடுகளையும் அதே அடிச்சுவடுகளைப் பின்பற்றத் தூண்டியுள்ளன.

இந்தோனேசியா, திமோர் லெஸ்தே, கம்போடியா போன்ற நாடுகள் இப்போது நாங்கள் அறிமுகப்படுத்திய தேசிய பயிற்சி வாரம் மற்றும் திறன் மேம்பாட்டு நிதி போன்ற மாதிரிகளை ஏற்றுக்கொள்கின்றன.

இந்த மரபு, உலகளாவிய திறன் மன்றம், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் ஆசியான் மனிதவள அமைச்சர்கள் கூட்டம் மூலம் தொடரும்

மலேசியாவின் மனித மூலதன மேம்பாட்டு உத்தி இப்போது பயிற்சி மானியங்களுக்கு அப்பால், தேசிய கொள்கை உருவாக்கம், வட்டார ஒத்துழைப்பை நோக்கி நகர்கிறது.

தொழில்நுட்ப திறன்கள், மதிப்பு அடிப்படையிலான திறன்களை வளர்க்கும் அதே வேளையில், பசுமை வேலைகள், இஸ்லாமிய நிதி, டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற தேசிய முன்னுரிமைகளுடன் பணியாளர் மேம்பாடு இணைக்கப்பட வேண்டும் என்று சையத் அல்வி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset