நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜூருவில் நடந்த மனைவி, மகள் கொலை வழக்கில் விசாரணைக்கு உதவ கணவர் கைது: போலிஸ்

புக்கிட் மெர்தாஜாம்:

ஜூருவில் நடந்த மனைவி, மகள் கொலை வழக்கில் விசாரணைக்கு உதவ கணவர் போலிசாரால் கைது செய்யப்பட்டார்.

பினாங்கு மாநில போலிஸ் தலைவர் டத்தோ அஸிசி இஸ்மாயில் இதனை கூறினார்.

கம்போங் செகோலா ஜூருவில் உள்ள வாடகை வீட்டில் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்தது.

இதில்  ஆடவரின் மனைவி, மகளின் உடல்கள் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக ஒருவரை போலிசார் கைது செய்துள்ளனர்.

​​குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக 57 வயது நபர் கைது செய்யப்பட்டதை அவர் உறுதிப்படுத்தினார்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள நோக்கத்தை அடையாளம் காண போலிசார் இன்னும் கூடுதல் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று அவர் கூறினார்.

முன்னதாக 51 வயது பெண், அவரது 11 வயது மகளின் உடல்கள் நேற்று இரவு 7.30 மணியளவில் இங்குள்ள கம்போங் செகோலா ஜூருவில் உள்ள அவர்களது வாடகை வீட்டில் அவரது கணவரால் கண்டெடுக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன  என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset