
செய்திகள் மலேசியா
நம்பிக்கை ஒளியான தீப ஒளி இந்திய சமூகத்தின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும்: டத்தோஸ்ரீ ரமணன்
கோலாலம்பூர்:
நம்பிக்கை ஒளியான தீப ஒளி இந்திய சமூகத்தின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும் என்று தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமக்கிருஷ்ணன் கூறினார்.
இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டம் மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்தின் வலிமை, ஒற்றுமை, முன்னேற்றத்தின் அடையாளமாகத் திகழும்..
இது மடானி அரசாங்கத்தின் தலைமையில் நாட்டின் அபிலாஷைகளுக்கு ஏற்ப தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
இருளை எதிர்த்து ஒளியின் வெற்றியின் அர்த்தத்தைக் கொண்டுவரும் தீபாவளியின் உணர்வை ஒற்றுமையை வலுப்படுத்தவும் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இந்திய சமூகத்தின் ஒற்றுமையை வலுப்படுத்தவும் முயற்சிகள் மூலம் செயலாக மாற்ற வேண்டும்.
தீப ஒளி என்பது ஒரு மதச் சின்னம் மட்டுமல்ல. வலிமை, அன்பு மற்றும் ஒற்றுமையின் சின்னமும் கூட.
மடானி மலேசியாவின் உணர்வில், தேசிய வளர்ச்சி செயல்முறைக்கு ஏற்ப மிகவும் வளமான மற்றும் உள்ளடக்கிய எதிர்காலத்தை உருவாக்குவதில் இந்திய சமூகம் தொடர்ந்து ஒன்றுபட்டு செயலில் பங்கு வகிக்க வேண்டும் என்று அவர் தீபாவளி வாழ்த்து செய்தியில் தெரிவித்தார்.
பல்வேறு அமைச்சின் முயற்சிகள் மூலம் அதிகமான இந்திய தொழில்முனைவோர், கூட்டுறவு நிறுவனங்கள் சமமான பொருளாதார மேம்பாட்டு வாய்ப்புகளை பெறுவதற்கான முயற்சிகளை அமைச்சு மேற்கொண்டுள்ளது.
இதில் தெக்குன் கீழ் ஸ்பூமி, ஸ்பூமி கோஸ் பிக் திட்டங்களுக்கு 100 மில்லியன் ரிங்கிட், அமானா இக்தியாரின் பெண் திட்டத்தின் கீழ் 100 மில்லியன் ரிங்கிட், பேங்க் ரக்யாட்டின் பிரிவ்-ஐ திட்டத்திற்கு100 மில்லியன் ரிங்கிட், எஸ்எம்இ கோர்ப்பின் ஐ-பேப் திட்டத்திற்கு 6 மில்லியன் ரிங்கிட், எஸ்எம்இ வங்கியின் கீழ் வணிகம் திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட் ஆகியவை அடங்கும்.
மேலும் பெர்னாஸின் இன் கீழ் சூரியன் திட்டத்தில் வரலாற்றில் முதல் முறையாக 54.5 மில்லியன் ரிங்கிட் சிறப்பு ஒதுக்கீட்டை வழங்குகிறது.
அமைச்சின் கீழ் இதுவரை அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் மொத்த முயற்சிகள் இந்திய சமூகத்திற்காக 500 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான ஒதுக்கீட்டை உள்ளடக்கியது
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சின் கீழ், அதிகமான இந்திய தொழில்முனைவோர் உள்ளூர், சர்வதேச அளவில் வெற்றி பெறுவதை நாங்கள் காண விரும்புகிறோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 19, 2025, 3:20 pm
அதிகப்படியான கண்டனம் காசாவின் அமைதியான தீர்வுக்கு உதவாது: பிரதமர்
October 19, 2025, 3:20 pm
தீப ஒளி பெண் தொழில் முனைவோருக்கு முன்னேற்றத்தை கொண்டு வரட்டும்: ஹேமலா
October 19, 2025, 3:18 pm
150 பேருக்கு தீபாவளி உதவிப் பொருட்கள்; 50ஆவது ஆண்டில் கால்பதிக்கிறது ஜெயபக்தி: டத்தோ செல்வராஜூ
October 19, 2025, 3:17 pm
தொழிலாளர்கள் மாற்றத்தில் மலேசியா வட்டாரத் தலைவராக உள்ளது: சையத் அல்வி
October 19, 2025, 1:31 pm
ஜூருவில் நடந்த மனைவி, மகள் கொலை வழக்கில் விசாரணைக்கு உதவ கணவர் கைது: போலிஸ்
October 19, 2025, 1:26 pm
தீப ஒளி அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை கொண்டு வரட்டும்: டான்ஸ்ரீ நடராஜா
October 19, 2025, 10:55 am
நிதி ஆற்றலை பொருத்து சிக்கனமாக, சீராக தீபாவளி பண்டிகையை கொண்டாடுங்கள்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
October 19, 2025, 10:36 am