நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட 2 பேர் மரணம்: 5 பேர் தப்பினர்

கெமாமான்:

கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட 2 பேர் மரணமடைந்த வேளையில் 5 பேர் தப்பினர்.


கெமாமான் போலிஸ் தலைவர் முகமட் ராசி ரோஸ்லி இதனை கூறினார்.

கிஜாலின் பந்தாய் பெனுன்ஜுக்கில் ஏழு பேர் கொண்ட ஒரு குடும்பம் சுற்றுலா சென்றது.

அவர்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது அலைகளால் இழுக்கப்பட்டு இரண்டு பெண்கள் மரணமடைந்தனர்.

மேலும் ஐந்து பேர் குளித்துக்கொண்டிருந்தபோது அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு கிட்டத்தட்ட நீரில் மூழ்கினர்.

மாலை 4.15 மணியளவில் நடந்த சம்பவத்தில் அவர்கள் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென அலைகளால் ஆழமான நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

ஐந்து பாதிக்கப்பட்டவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களால் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்.

ஆனால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு இரண்டு பாதிக்கப்பட்டவர்கள் மயக்கமடைந்தனர்.

இறுதியில் அவர்கள் மரணமடைந்ததாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset