நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோத்தா மடானியின் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

கோத்தா மடானியின் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

நாட்டின் நிர்வாக மையத்தின் முக்கிய மேம்பாட்டாளரான புத்ராஜெயா ஹோல்டிங்ஸ் இந்தத் திட்டத்தில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் கோத்தா மடானியின் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

குறுகிய காலத்தில் நாம் முழுமையான கட்டுமானத்தை பார்க்க முடியும் என்று நம்புகிறேன்.

கட்டுமானப் பணி மெதுவாக செல்வதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது.

புத்ராஜெயா ஹோல்டிங்ஸ் முழு வேகத்தில் செயல்பட வேண்டும் என்று நாங்கள் இப்போது காத்திருக்கிறோம்.

புத்ராஜெயா ஹோல்டிங்ஸின் 30ஆவது ஆண்டு விழாவில் பேசும் போது அவர் இதனை அழுத்தமாகக் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset