நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீபாவளி கொண்டாடும் வேளையில் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ்: சுபாங் கம்போங் பாடாங் தேம்பாக் மக்கள் குமுறல்

சுபாங்:

தீபாவளி கொண்டாடும் வேளையில் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதனால்  சுபாங் கம்போங் பாடாங் தேம்பாக் மக்கள் வருத்ததுடன் உள்ளனர் என்று ரகுபதி கூறினார்.

கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சுபாங் கம்போங் பாடாங் தேம்பாக்கில் மக்கள் வசித்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் 200க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் இப்பகுதியில் வாழ்ந்து வந்தனர்.

ஆனால் இக் குடியிருப்பு பகுதிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு பணிகளால் பெரும்பாலானோர் இங்கிருந்து வெளியேறினர்.

இப்போது 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.

வீடுகளை தவிர்த்து அவர்கள்
இருந்து விவசாயம் மேற்கொள்கின்றனர்.

இந்த விவசாயம் தான் அம்மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது.

இந்நிலையில் இவ்வீடுகளையும் விவசாயம் செய்து வரும் இடங்களையும் காலி செய்ய வேண்டும் என நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது.

அதுவும் தீபாவளி நேரத்தில் நோட்டீஸ் வழங்கப்பட்டது அனைவரும் பெரும் வேதனையாக உள்ளது.

தீபாவளியை கொண்டாடுவதா அல்லது இடத்தை பாதுகாப்பதா என்று தெரியாமல் மக்கள் அனைவரும் அதிருப்தியில் உள்ளனர்.

ஆக எங்களின் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

அதற்கு சுங்கைபூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ரமணன் எங்களுக்கு உதவ வேண்டும்.

இதுவே எனது கோரிக்கையாகும் என்று ரகுபதி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset