நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மித்ராவில் பிரபாகரனின் பொறுப்பை நான் அபகரிக்கவில்லை: நாங்கள் இணைந்து செயல்படுவோம்: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

மித்ராவில்  பிரபாகரனின் பொறுப்பை நான் அபகரிக்கவில்லை.

நாங்கள் இருவரும் இணைந்து செயல்படுவோம் என்று தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமக்கிருஷ்ணன் கூறினார்.


மித்ராவில் எங்கள் பங்கை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

மேலும் பிரபாகரனின் பங்கை நான் அபகரித்து விட்டதாக என்ற குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன்.

எனக்கும் மித்ரா தலைவர் பி. பிரபாகரனுக்கும் இடையே எந்த நெருக்கடியும் இல்லை.

எங்கே நெருக்கடி இருக்கிறது? நெருக்கடி இருப்பதாக யார் சொன்னது?

பிரபா இப்போதுதான் என்னைச் சந்தித்தார். நாங்கள் இன்னும் நண்பர்கள்

இன்னும் ஒன்றாக வேலை செய்கிறோம் என்று 2025 தேசிய தீபாவளி  திறந்த இல்ல உபசரிப்பு விழாவுக்கு பின் அவர் இவ்வாறு கூறினார்.

பிரதமர் கூறியது போல், இந்திய சமூகத்திற்கு உதவும் பல நிறுவனங்களும் அமைச்சுகளும் உள்ளன.

மித்ராவின் பங்கை ஏற்கவோ அல்லது திருடவோ அல்ல

ஒருங்கிணைக்க மட்டுமே எனக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

-  பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset