நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தனிநபர் கடன்களை அங்கீகரிப்பதில் ஊழல் செய்ததாக 16 வங்கி அதிகாரிகள் சந்தேகிக்கப்படுகிறார்கள்: எம்ஏசிசி

கோலாலம்பூர்:

தனிநபர் கடன்களை அங்கீகரிப்பதில் ஊழல் செய்ததாக 16 வங்கி அதிகாரிகள் சந்தேகிக்கப்படுகிறார்கள்.

வாடிக்கையாளர்களுக்கு தனிநபர் கடன்களை அங்கீகரிப்பதற்காக ஒரு நிதி ஆலோசனை நிறுவனத்துடன் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக, வங்கி நிறுவனங்களின் அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள் உட்பட மொத்தம் 16 நபர்கள், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் ஜனவரி மாதம் ஓப்ஸ் ஸ்கை மூலம் கைது செய்யப்பட்டனர்.

எம்ஏசிசி வட்டாரங்களின்படி, அக்டோபர் முழுவதும் அவர்கள் மீது கட்டம் கட்டமாக குற்றம் சாட்டப்படும்.

தனிநபர்கள் மீது கட்டம் கட்டமாக குற்றம் சாட்ட எம்ஏசிசி அனுமதி பெற்றுள்ளது.

கோலாலம்பூர் நீதிமன்றத்தில் நேற்று இரண்டு வங்கி அதிகாரிகள் மீதும், இன்று நான்கு முன்னாள் வங்கி அதிகாரிகள் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

நெகிரி செம்பிலானில் உள்ள சிரம்பான் அமர்வு நீதிமன்றம், சிலாங்கூரில் உள்ள ஷா ஆலம் அமர்வு நீதிமன்றம், சபாவில் உள்ள கோத்தா கினபாலு அமர்வு நீதிமன்றம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் குற்றச்சாட்டுகள் தொடரப்படும்.

ஒரே நேரத்தில் நிறுவனம் வாடிக்கையாளர்கள் சமர்ப்பித்த தனிநபர் கடன் விண்ணப்பங்களைச் செயல்படுத்தவும் அங்கீகரிக்கவும் உதவியதற்காக அவர்கள் லஞ்சம் பெற்றதாக நம்பப்படுகிறது.

இதன் விளைவாக வாடிக்கையாளர்கள் தங்கள் தகுதி வரம்புகளை மீறி பல கடன்களைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset