நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளிகளுக்கு வருவதுடன் ரோந்து பணிகளை போலிசார் அதிகரிப்பார்கள்: சைபுடின்

கோலாலம்பூர்:

பள்ளிகளுக்கு வருவதுடன் ரோந்து பணிகளை போலிசார் உடனடியாக அதிகரிப்பார்கள்.

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இதனை கூறினார்.

அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இலக்கவியல் பாதுகாப்புக் கொள்கையை ஆதரிக்கும் ஒரு நடவடிக்கையாக, உள்துறை அமைச்சு பள்ளிப் பகுதிகளில் ரோந்துப் பணிகளையும், போலிசாரின் இருப்பையும் அதிகரிக்கும்.

கல்வி, தடுப்பு, அமலாக்கத்தின் அம்சங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இருக்கும்.

ஒழுக்கம், இணைய பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு வழிகாட்டுவதில் பள்ளி தொடர்பு அதிகாரிகளின் பங்கை வலுப்படுத்தும்.

இதற்காக கல்வியமைச்சு, பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஆகியவற்றுடன் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்களை தீவிரப்படுத்துவதும் மற்ற முக்கிய விவகாரங்களில் கவனம் செலுத்தும்  என்று அவர் கூறினார்.

பள்ளிகள், சமூகங்களில் இளைஞர்களுக்கு ஏற்ற மனநல ஆதரவு அமைப்புகளை மேம்படுத்துதல், சாதனத் தவறான பயன்பாடு, இணையவழி மிரட்டல் எதிராக நிலையான நடவடிக்கையுடன் தெளிவான அமலாக்கத்தை மையமாகக் கொண்ட ஒரு விரிவான அணுகுமுறையை உள்துறை அமைச்சு ஆதரிக்கிறது என்று அவர்  தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset