நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழ்நாடு அரசு தலைமை காஜியாக மௌலானா முஃப்தி உஸ்மான் முஹ்யத்தீன் பாகவி நியமனம்

சென்னை: 

தகுதிமிக்க தமிழ்நாடு தலைமை அரசு தலைமை காஜியாக மௌலானா முஃப்தி உஸ்மான் முஹ்யத்தீன் பாகவி நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழகத்தின் தாய் மதரஸா என்று அழைக்கப்படும் பாக்கியாத் சாலிஹாத் மார்க்கக் கல்விக் கூடத்தின் முதல்வராக பல ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியவர்.

மிகச் சிறந்த ஆன்மிகவாதியான மௌலானா உஸ்மான் முஹ்யத்தீன் பாகவி சிறந்த பண்பாளர். மார்க்கத் தீர்ப்புகளை நடுநிலை தவறாமல் வழங்கக்கூடியவர் என்று பலராலும் புகழப்படக் கூடியவர்.

இவரது சொந்த ஊர் கடையநல்லூர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு தலைமை காஜியாக சிறப்பாக செயல்பட்ட பேராசிரியர் மௌலானா ஸலாஹுத்தீன் அய்யூப் அஸ்ஹரியின் மறைவை அடுத்து இந்த நியமனத்தை தமிழக அரசு செய்துள்ளது.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset