செய்திகள் தமிழ் தொடர்புகள்
நாளை முதல் 6 நாட்களுக்கு தமிழத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை:
நாளை (டிச.8) முதல் 6 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தை நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது.
இதன் காரணமாக நாளையும், நாளை மறுதினமும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
10 முதல் 13-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் நாளை (டிச.8) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
வட தமிழக கடலோரப் பகுதிகளில் 9-ம் தேதியும், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் 10-ம் தேதியும் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் மிமிசலில் 4 செமீ, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு, புதுக்கோட்டை மாவட்டம் ஆயிங்குடி ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 6, 2025, 4:15 pm
இண்டிகோ விமானங்கள் ரத்து: சென்னையில் பயணிகள் போராட்டம்
December 2, 2025, 6:03 pm
தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழையால் ஒரே நாளில் 80 வீடுகள் இடிந்து சேதம்
November 30, 2025, 3:57 pm
எஸ்ஐஆர் படிவம் வழங்க கால அவகாசம் டிசம்பர் 11 வரை நீட்டிப்பு
November 30, 2025, 12:36 pm
மழைக்காலம் என்று பாராமல் எஸ்ஐஆர் பணிக்கு தள்ளப்பட்டுள்ள அதிகாரிகள்: கனிமொழி குற்றச்சாட்டு
November 29, 2025, 11:25 pm
கொழும்பு விமானநிலையத்தில் சிக்கித் தவிக்கும் சென்னைக்கு வர வேண்டிய 300 பயணிகள்
November 29, 2025, 3:05 pm
சென்னையை நோக்கி வரும் டிட்வா புயல்
November 28, 2025, 8:18 pm
பாம்பனில் புயல்: தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்
November 27, 2025, 2:17 pm
