செய்திகள் தமிழ் தொடர்புகள்
மழைக்காலம் என்று பாராமல் எஸ்ஐஆர் பணிக்கு தள்ளப்பட்டுள்ள அதிகாரிகள்: கனிமொழி குற்றச்சாட்டு
சென்னை:
மழைக்காலத்தில் மக்களை பாதுகாக்காமல் எஸ்ஐஆர்பணியை செய்ய வேண்டிய நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர் என்று திமுக எம்பி கனிமொழி குற்றம்சாட்டி உள்ளார்.
திமுக எம்பிக்கள் கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது.
கூட்ட முடிவில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எஸ்ஐஆர் பிரச்சினை குறித்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் குரல் எழுப்புமாறு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழகத்துக்கு வராமல் இருக்கும் 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதி, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கல்விக்கான நிதி தொடர்பாகவும் பேச இருக்கிறோம். நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும். அதற்காக ஒரு குழு வந்து பல ஆய்வுகளை செய்துவிட்டு சென்றுள்ளார்கள்.
ஆனால் தற்போதுவரை எந்த பதிலும் இல்லை. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது, தமிழகத்துக்கான முக்கியமான பல பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மனிதாபிமானமே இல்லாமல் நடத்தக்கூடிய ஒரு திட்டமாக எஸ்ஐஆர் உள்ளது. பல மாநிலங்களில் பிஎல்ஓக்கள் மன அழுத்தத்தில் இருந்து வருகிறார்கள்.
தமிழகத்தில் மிக குறுகிய கால அவகாசத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அழுத்தம் தரப்பட்டுள்ளது, ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டமாக தான் இந்த பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
மழைக்காலம் என்பதை கூட கணக்கில் எடுத்து கொள்ளாமல் எல்லா அதிகாரிகளும், மழையில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான பணிகளை விட்டு விட்டு, எஸ்ஐஆர் பணிகளில் கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மழைக்காலத்தில் மக்கள் குறித்த அக்கறையே இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 13, 2026, 2:30 pm
நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி
May 13, 2026, 12:09 pm
சென்னையில் இருந்து 238 பேருடன் அபுதாபிக்கு புறப்பட்ட விமானத்தில் கோளாறு
May 12, 2026, 11:02 am
தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு
May 10, 2026, 1:11 pm
