செய்திகள் தமிழ் தொடர்புகள்
எஸ்ஐஆர் படிவம் வழங்க கால அவகாசம் டிசம்பர் 11 வரை நீட்டிப்பு
சென்னை:
பூர்த்தி செய்யப்பட்ட எஸ்ஐஆர் விண்ணப்பங்களை ஒப்படைக்க டிச.,11-ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 4 ஆம் தேதி முதல் எஸ்.ஐ.ஆர் என்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கின.
இந்தப் பணிகளில் தமிழகம் முழுவதும் 68,470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஓ.) ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதல் நாளில் இருந்தே வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கொடுத்து வருகின்றனர்.
ஆனால், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பணிகளில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளது எனக்கூறி திமுக எதிர்ப்பு தெரிவித்து வருவது கவனிக்கத்தக்கது.
இந்நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட எஸ்ஐஆர் விண்ணப்பங்களை ஒப்படைக்க டிச.,11-ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தவிட்டுள்ளது.
அதாவது, எஸ்ஐஆர் நடைமுறைகள் டிசம்பர் 4 ஆம் தேதியுடன் முடிவடையவிருந்த நிலையில், மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், வரைவு வாக்காளர் பட்டியல் டிச.16-ஆம் தேதியும், வாக்காளர் இறுதிப் பட்டியல் பிப்.14 -ம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 14, 2026, 5:43 pm
கும்பகோணம் தனி மாவட்டமாக விரைவில் முதல்வர் அறிவிப்பார்: வேளாண் அமைச்சர் வினோத்
June 11, 2026, 4:10 pm
திரைமொழியில் தனிமொழி பேசிய இயக்குநருக்கு புகழஞ்சலி
June 10, 2026, 3:01 pm
பாரதிராஜாவுக்கு முழு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு
June 8, 2026, 12:58 pm
சென்னையில் மின்வெட்டு பிரச்சினை: இரவு நேரங்களில் வீதிகளில் இறங்கி போராடும் மக்கள்
June 3, 2026, 5:00 pm
