
செய்திகள் மலேசியா
தேசிய முன்னணியில் நீடிப்பதும் வெளியேறுவதும் மஇகாவைப் பொறுத்தது: ஜாஹிட்
கோலாலம்பூர்:
தேசிய முன்னணியில் நீடிப்பதும் வெளியேறுவதும் மஇகாவைப் பொறுத்தது.
துணைப் பிரதமரரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.
தேசிய முன்னணி.திறந்த நிலையில் உள்ளது. மேலும் மஇகா கூட்டணியை விட்டு வெளியேறுவதைத் தடுக்காது.
கூட்டணியில் சேரவோ அல்லது வெளியேறவோ கூறு கட்சிகள் மீது எந்த வற்புறுத்தலும் இல்லை என்பதைக் கருத்தில் கொண்ட பின்னரே இந்த அணுகுமுறை எடுக்கப்பட்டது.
ஆரம்பத்தில் தேசிய முன்னணி திறக்கும் போது14 உறுப்பு கட்சிகள் இருந்தன.
அதன் அடிப்படையில் தேசிய முன்னணியில் நுழையவோ அல்லது வெளியேறவோ எந்த கட்டாயமும் இல்லை.
மேலும் வரும் பேராளர் மாநாட்டில் மஇகா புத்திசாலித்தனமான முடிவை எடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
இந்த முடிவு நிச்சயமாக அவர்கள்
பின்னர் வருத்தப்படாத வகையில் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
முன்னதாக மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்,
கட்சி தேசிய முன்னணி உடன் நீடிக்குமா இல்லையா என்பது குறித்த முடிவு நவம்பர் 16 ஆம் தேதி நடைபெறும் மஇகா பொதுக் கூட்டத்தில் இறுதி செய்யப்படும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 17, 2025, 6:47 pm
ஆலயங்களுக்கான தர்ம மடானி நிதி திட்டத்திற்கு அக்டோபர் 18 முதல் விண்ணப்பம் செய்யலாம்: மித்ரா
October 17, 2025, 6:31 pm
ஆவண மோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக எப்ஏஎம் செயலாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்: டத்தோ சிவசுந்தரம்
October 17, 2025, 5:27 pm
நெகிழி இல்லாத தீபாவளியைக் கொண்டாடுவோம்: சுப்பாராவ் வேண்டுகோள்
October 17, 2025, 3:32 pm
ரஹ்மா உதவித் தொகையின் 4ஆம் கட்ட விநியோகம் நாளை தொடங்குகிறது: 8.8 மில்லியன் பேர் பயனடையவுள்ளனர்
October 17, 2025, 11:37 am