
செய்திகள் மலேசியா
ஆலயங்களுக்கான தர்ம மடானி நிதி திட்டத்திற்கு அக்டோபர் 18 முதல் விண்ணப்பம் செய்யலாம்: மித்ரா
புத்ராஜெயா:
ஆலயங்களுக்கான தர்ம மடானி நிதி திட்டத்திற்கு அக்டோபர் 18 முதல் விண்ணப்பம் செய்யலாம்.
மித்ரா ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்தது.
தர்ம மதனி திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்களைத் தொடர்ந்து,
இந்திய சமூக முன் முயற்சி அமலாக்கக் குழுவின் தலைவராக தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் தர்ம மடானி திட்டம் மித்ராவால் செயல்படுத்தப்படும் என்று முடிவு செய்துள்ளார்.
அவ்வகையில் 2025 தர்ம மடானி திட்டத்திற்கான விண்ணப்பங்கள் அக்டோபர் 18 சனிக்கிழமை நள்ளிரவு 12.00 மணி முதல் நவம்பர் 3 திங்கட்கிழமை இரவு 11.59 மணி வரை திறந்திருக்கும்.
மலேசியா முழுவதும் உள்ள அனைத்து இந்து ஆலயங்கள் தர்ம மடானி திட்டத்தின் கீழ் Borang Permohonan Program Pemerkasaan Rumah Ibadat Hindu Di Bawah Program Dharmவழிகாட்டுதல்கள் கூகுள் படிவ இணைப்பு மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம்
முழுமையாக உள்ளதா மற்றும் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்கிறதா என்பதை உறுதிப்படுத்த,
தர்ம மடானி திட்டத்திற்கான
Panduan Permohonan Program Dharma MADANI விண்ணப்ப வழிகாட்டுதல்கள் இணைப்பைப் பார்க்கலாம்.
மேலும் விண்ணப்பத் தகவல்களை அதிகாரப்பூர்வ மித்ரா வலைத்தளம்
(www.mitra.gov.my), அதிகாரப்பூர்வ மித்ரா சமூக ஊடக தளம் (முகநூல்) ஆகியவற்றிலும் காணலாம் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 17, 2025, 10:26 pm
ஆர்எச்பி வங்கி கணக்கை மூடும் நடவடிக்கைக்கு தற்காலிக தடை விதித்து மேரிடைம் நெட்வொர்க் நிறுவனம் வெற்றி பெற்றது
October 17, 2025, 6:32 pm
தேசிய முன்னணியில் நீடிப்பதும் வெளியேறுவதும் மஇகாவைப் பொறுத்தது: ஜாஹிட்
October 17, 2025, 6:31 pm
ஆவண மோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக எப்ஏஎம் செயலாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்: டத்தோ சிவசுந்தரம்
October 17, 2025, 5:27 pm
நெகிழி இல்லாத தீபாவளியைக் கொண்டாடுவோம்: சுப்பாராவ் வேண்டுகோள்
October 17, 2025, 3:32 pm