நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளி பாதுகாப்பு பிரச்சினைகளை கையாள்வதற்கான 3 நடவடிக்கைகளில் கைத்தொலைபேசி பயன்பாட்டை தடை செய்வதும் ஒன்றாகும்: பிரதமர்

புத்ராஜெயா:

பள்ளி பாதுகாப்பு பிரச்சினைகளை கையாள்வதற்கான 3 நடவடிக்கைகளில் கைத்தொலைபேசி பயன்பாட்டை தடை செய்வதும் ஒன்றாகும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

பள்ளிகளில் பாதுகாப்பு பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய அமைச்சரவை மூன்று உடனடி நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளது.

அவற்றில் மாணவர்களை உள்ளடக்கிய கொடுமைப்படுத்துதல், வன்முறை குற்றங்கள் குறித்த அதிகரித்து வரும் கவலைகளும் அடங்கும்.

இந்த திட்டத்தில் 16 வயதுக்குட்பட்ட மாணவர்கள் கைத்தொலைபேசி பயன்படுத்துவதைத் தடை செய்வதும் அடங்கும்.

சமூக ஊடகங்கள், இணைய விளையாட்டுகளின் செல்வாக்கின் தாக்கத்தையும் நாங்கள் கண்டிருக்கிறோம்

இது சில நேரங்களில் பல குற்றச் செயல்களுக்கு வழிவகுக்கிறது.
அதனால்தான் 16 வயது மற்றும் அதற்குக் குறைவான மாணவர்களுக்கு கைத்தொலைபேசி பயன்படுத்துவதைத் தடை செய்ய நடவடிக்கை எடுப்போம்.

ஆராய்ச்சி இன்னும் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் பல நாடுகள் அதை செயல்படுத்தியுள்ளன என்று வெள்ளிக்கிழமை தொழுமைக்கு பின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.

-  பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset