நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆவண மோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக எப்ஏஎம் செயலாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்: டத்தோ சிவசுந்தரம்

பெட்டாலிங் ஜெயா:

ஆவண மோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக  எப்ஏஎம் செயலாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

எப்ஏஎம் எனப்படும் மலேசிய கால்பந்து சங்கத்தின் துணைத் தலைவர் டத்தோ சிவசுந்தரம் இதனை கூறினார்.

பிபாவிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை மோசடி செய்ததாக  குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத் தொடர்ந்து மலேசிய கால்பந்து சங்கத்தின்  பொதுச் செயலாளர் நூர் அஸ்மான் ரஹ்மான் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஏழு பாரம்பரிய வீரர்களின் தாத்தா பாட்டி மலேசியாவில் பிறந்ததாகக் கூறும் எம்ஏஎம் ஆவணங்களில் முரண்பாடுகள் இருப்பதாக பிபா ஒழுங்குமுறைக் குழு கூறியது.

உலக கால்பந்து அமைப்பின் விசாரணையில் அசல் பதிவுகள் அவர்கள் ஸ்பெயின், அர்ஜெண்டினா, பிரேசில், நெதர்லாந்தில் பிறந்ததாகக் காட்டியது.

இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்க நாட்டின் கால்பந்து நிர்வாகக் குழு ஒரு குழுவை அமைத்துள்ளது.

அக்குழு தனது கடமைகளைச் செய்ய உதவும் வகையில், இன்று முதல் செயலாளர்  இடைநீக்கம் செய்யப்படுவார்.

விசாரணை வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

என்ன தவறு நடந்தது என்பதை குழு தீர்மானிக்கட்டும்.

கிளானா ஜெயாவில் உள்ள விஸ்மா எப்ஏஎம்மில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் டத்தோ சிவசுந்தரம் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset