நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டிற்குள்ளேயே உதவி வழங்குவதில் கவனம் செலுத்துங்கள்: காசாவிற்கான தன்னார்வ அமைப்புகளுக்கு பிரதமர் வலியுறுத்து

கோலாலம்பூர்:

நாட்டிற்குள்ளேயே உதவி வழங்குவதில் கவனம் செலுத்துங்கள் என காசாவிற்கான தன்னார்வ அமைப்புகளுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் வலியுறுத்து.

அதிகப்படியான தன்னார்வலர்களை காசாவிற்கு அனுப்ப வேண்டாம்.

அதற்கு பதிலாக அவர்களின் மனிதாபிமான உதவி முயற்சிகளை நாட்டிற்குள்ளேயே உதவி வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

காசாவில் உள்ள அதிகாரிகளுக்கு அதிக எண்ணிக்கையிலான வெளிப்புற சக்திகளின் இருப்பு தேவையில்லை.

மாறாக மருந்துகள், உணவு, அடிப்படை வசதிகளை வழங்குவதே தேவை.

எகிப்தில் நிலம் வழியாக காசாவிற்கு மனிதாபிமான உதவி விநியோகத்தின் இரண்டாவது அலையை செயல்படுத்துவதற்காக அரசு சாரா நிறுவனத் தலைவர்களுக்கும் இதே விஷயம் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
உண்மையில் அவர்களுக்கு மருந்து, உணவு தேவை. அது போன்ற அடிப்படை வசதிகள். எங்கள் பெரிய இருப்பு தேவையில்லை.

மருத்துவர்கள், பொறியாளர்கள் பற்றி அவர் சொன்னது இதுதான் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset