நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமூகத்திற்கு 42 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள  பல்வேறு திட்டங்களை அரசாங்கம் கொண்டுள்ளது: பிரதமர் 

கோலாலம்பூர்:

இந்திய சமூகத்திற்கு 42 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள  பல்வேறு திட்டங்களை அரசாங்கம் கொண்டுள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.

இந்திய சமூகத்தின் நலனுக்காக அரசாங்கம் பல்வேறு திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

இதன் அடிப்படையில் 42.25 மில்லியன் மில்லியன் மதிப்புள்ள பல புதிய திட்டங்களை அரசாங்கம் செயல்படுத்த உள்ளது.

பெரந்தி சிஸ்வா முயற்சி மூலம் இலவச கல்வித் திட்டம், மடிக்கணினிகள் வழங்குதல் ஆகியவை இந்த முயற்சிகளில் அடங்கும்.

மித்ராவின் கீழ் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தையும் உள்ளடக்கிய இந்த முயற்சிகளாகும்.

நேற்று பிரிக்பீல்ட்ஸில் உள்ள மெட்ராஸ் பேக்கரியில் தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது பிரதமர் இதனை பகிர்ந்து கொண்டார்.

தமிழ் ஊடகவியலாளர்களுடன் மதிய தேநீர் அருந்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அதே நேரத்தில் பல்வேறு தற்போதைய பிரச்சினைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டேன்.

கூடுதலாக பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தையில் உள்ள பல கடைகளில் தீபாவளிக்கு முன்னதாக இந்திய சமூகத்தினரின் ஏற்பாடுகளையும் பார்வையிட்டேன் என்று அவர் நேற்று இரவு ஒரு பேஸ்புக் பதிவில் பிரதமர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset