நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அனைத்து பள்ளிகளிலும் பாதுகாப்பு, கண்காணிப்பு அம்சங்களை கல்வியமைச்சு அதிகரிக்க வேண்டும்: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

அனைத்து பள்ளிகளிலும் பாதுகாப்பு, கண்காணிப்பு அம்சங்களை கல்வியமைச்சு அதிகரிக்க வேண்டும்.

சிரம்பான் தொகுதி பெர்சத்து  சயாப் பிரிவுத் தலைவரும் நீலாய் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளருமான டத்தோ சரவணக்குமார் இதனை வலியுறுத்தினார்.

தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளில் நடக்கும் சம்பவங்கள் பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

இடைநிலைப் பள்ளியில் மாணவி ஒருவர் சக மாணவனால் கத்தியில் குத்தி கொல்லப்பட்டார்.

அதே வேளையில் பள்ளி வளாகம் அல்லது வெளிப்புறங்களில் மாணவர்கள் அடித்து கொள்ளும் வீடியோ பதிவுகள் அதிகம் வைரலாகின்றன.

இதற்கு மேலாக பள்ளிகளில் மாணவர்களின் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பெரும் வேதனையை அளிக்கிறது.

பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

குறிப்பாக பள்ளிகளில் பாதுகாப்பு, கண்காணிப்பு அம்சங்கள் அதிகரிக்க வேண்டும்.

முடிந்தால் பள்ளிகளில் சிசிடிவி பொருத்தும் நடவடிக்கைகளை கல்வியமைச்சு எடுக்க வேண்டும். இது மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.

மேலும் பள்ளிகள் மாணவர்களுக்கு பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும்.

மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கக் கூடாது என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset