நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாணவர் ஒழுக்கம், பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து அமைச்சரவை இன்று முடிவெடுக்கும்: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

மாணவர் ஒழுக்கம், பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து அமைச்சரவை இன்று முடிவெடுக்கும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

பள்ளிகளில் சமீப காலங்களில் பல பொருத்தமற்ற சம்பவங்கள் நடந்ததாக வந்த புகார்கள் அதிர்ச்சியளிக்கிறது.

ஆக பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட ஒழுக்கம், பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் இன்று ஒரு முடிவை தீர்க்கமாக எடுக்கும்.

இந்த விஷயத்தில் கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக்குடன் நேற்று ஒரு சுருக்கமான கலந்துரையாடல் நடத்தினேன்.

நாங்கள் அமைச்சரவை மட்டத்தில் இதைப் பற்றி விரிவாக விவாதிப்போம்.

நான் ஏற்கனவே அமைச்சருடன் சிறிது விவாதித்துள்ளேன். இன்று நாங்கள் ஒரு முடிவை எடுப்போம்.

ப்ள்ளிகளில் பல பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் கொடுமைப்படுத்துதல் வழக்குகள் பதிவாகியதைத் தொடர்ந்து கல்வி சீர்திருத்தங்கள் குறித்து கருத்து கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset