
செய்திகள் தமிழ் தொடர்புகள்
மதுரையில் பரபரப்பு: ஏடிஎம் இயந்திரம் தீபற்றிக் கொண்டதால் பல லட்சம் சாம்பல்
மதுரை:
மதுரையில் ஏடிஎம் மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் ரொக்க பணம் எரிந்து சாம்பலானது.
மதுரை, கீரைத்துறை அருகே புது மாகாளிப்பட்டி பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் செயல்பட்டு வந்தது.
நேற்று காலை இங்குள்ள ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து திடீரென புகை வௌியானது. சிறிது நேரத்தில் மளமளவென தீப்பிடித்து ஏடிஎம் இயந்திரம் உள்ள அறை முழுவதும் எரிந்தது. இதனால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தீவிபத்து குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்படி, அனுப்பானடி தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைத்தனர்.
இருப்பினும் ஏடிஎம் இயந்திரம், அதனுள் இருந்த பல லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஏடிஎம் மைய அறை முற்றிலும் எரிந்து நாசமானது.
ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவே தீ விபத்துக்கு காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருப்பினும் ஏடிஎம் மையம், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி தெற்குவாசல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 18, 2025, 8:49 am
தமிழ்நாடு அரசு தலைமை காஜியாக மௌலானா முஃப்தி உஸ்மான் முஹ்யத்தீன் பாகவி நியமனம்
October 15, 2025, 12:39 pm
விஜய்யுடன் புஸ்ஸி ஆனந்த் அவசர ஆலோசனை
October 14, 2025, 12:44 pm
சிபிஐ விசாரணையை விட விஜயகாந்த்தின் ‘புலன் விசாரணை’ நல்லாருக்கும்: சீமான் நக்கல்
October 11, 2025, 9:34 pm
திருச்சி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
October 10, 2025, 3:25 pm
விஜய் பிரசாரத்துக்கு 60 டிரோன்கள் கொண்டு வரப்பட்டது ஏன்?: மாவட்ட செயலாளர் மதியழகனிடம் போலீசார் விசாரணை
October 8, 2025, 10:24 pm
காஸா இனப் படுகொலைக்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம்: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
October 6, 2025, 10:30 pm
ராமதாஸை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்
October 6, 2025, 9:20 pm