
செய்திகள் மலேசியா
கோவிட்-19 காரணமாக பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகள் பற்றிய தகவல்களை மக்கள் பிரதிநிதிகள் வழங்க வேண்டும்: இஸ்மாயில் சப்ரி
மலாக்கா:
கோவிட்-19 காரணமாக பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகள் பற்றிய தகவல்களை மக்கள் பிரதிநிதிகள் வழங்க வேண்டும்.
முன்னாள் பிரதமரும் மலேசிய குடும்ப அறக்கட்டளை தலைவருமான டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
கோவிட்-19 காரணமாக பல பிள்ளைகள் தங்களின் பெற்றோரை இழந்திருப்பார்கள்.
அப்படிப்பட்டஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் முயற்சியாக சமூகத் தலைவர்கள், குறிப்பாக நாடு முழுவதும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மலேசிய குடும்ப அறக்கட்டளைக்கு அவர்களின் தகவல்களை அனுப்ப வேண்டும்.
மாதாந்திர உதவித் திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 1,000 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர்.
மேலும் பலர் அவ்வாறு பதிவு செய்வார்கள் என்று நம்புவதாக இஸ்மாயில் சப்ரி கூறினார்.
அறக்கட்டளை வழங்கும் உதவிக்கு எவ்வாறு பதிவு செய்வது என்று தெரியாத பலர் இன்னும் இருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்.
குறிப்பாக கோவிட்-19 காரணமாக தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகள்.
மேலும், தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து இந்த மக்களைப் பற்றிய தகவல்களை நான் வரவேற்கிறேன்.
உதவித் திட்டத்திற்கு பதிவு தகுதியுள்ளவர்களுக்கு இன்னும் திறந்திருக்கும்.
மேலும் 16 வயது கீழ்ப்பட்டவர்களுக்கு 200 ரிங்கிட்டும் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு 250 ரிங்கிட் மாதாந்திர பங்களிப்பைப் பெறுவதில் இருந்து யாரும் விடுபடக்கூடாது என்பதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 17, 2025, 3:32 pm
ரஹ்மா உதவித் தொகையின் 4ஆம் கட்ட விநியோகம் நாளை தொடங்குகிறது: 8.8 மில்லியன் பேர் பயனடையவுள்ளனர்
October 17, 2025, 11:37 am
சபா தேர்தல்: தேமு, நம்பிக்கை கூட்டணி இடையிலான தொகுதிகள் நாளை இறுதி செய்யப்படும்: பூங் மொக்தார்
October 17, 2025, 10:27 am
மாணவர் ஒழுக்கம், பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து அமைச்சரவை இன்று முடிவெடுக்கும்: பிரதமர் அன்வார்
October 17, 2025, 9:37 am
சிறப்புக் கல்வி பெறும் மாணவர் இன்ஃப்ளூயன்ஸா ஏ தொற்றால் மரணமடைந்தார்: மாவட்ட போலிஸ் தலைவர் விஜயராவ்
October 17, 2025, 9:28 am