நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: 2.60 லட்சம் பேர் முன்பதிவு

சென்னை: 

தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 

இன்றைய தினம் சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் 2,092, சிறப்பு பேருந்துகள் 760. மேலும் தமிழகத்தில் பல்வேறு முக்கிய இடங்களிலிருந்து 565 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அரசு பேருந்துகளில் பயணிப்பதற்காக தற்போது வரை 2.60 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

கார், இதர வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து பழைய மாமல்லபுரம் சாலை, கேளம்பாக்கம், திருப்போரூர், செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை, கேளம்பாக்கம், திருப்போரூர், செங்கல்பட்டு சாலை வழியாக செல்ல மாற்றுவழி அமைக்கப்பட்டுள்ளது. 

வெளிமாவட்ட நீண்ட தூர பேருந்துகளை பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக மாநகர போக்குவரத்துக்கழகம் கூடுதலாக 275 சிறப்பு இணைப்பு பேருந்துகளை இன்று முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இயக்க உள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset