நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளிகளில் வன்முறைகள் அதிகரிப்பை அனுமதிக்கக் கூடாது: கோபிந்த் சிங்

கோலாலம்பூர்:

பள்ளிகளில் வன்முறைகள் அதிகரிப்பை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.

இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் இதனை கூறினார்.

பண்டார் உத்தாமாவில் உள்ள ஒரு இடைநிலைப் பள்ளியில் நடந்த 16 வயது மாணவியின் கத்திக்குத்து சம்பவம் அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது.

இந்த துயர சம்பவம் இதயங்களை உடைத்துவிட்டது. மேலும் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிகள் கற்றல், வளர்ச்சி, நட்புக்காக உருவாக்கப்பட்ட பாதுகாப்பான சூழலாக இருக்க வேண்டும்.

போலிசார் தங்கள் விசாரணைகளை மேற்கொள்ள இடவசதி தேவை என்றால்  ​​டாமன்சாராவில் என் அலுவலகம் உள்ளது. 

பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவவும் இந்த கடினமான நேரத்தில் அவர்களை அணுகி ஆதரவளிக்க எனது குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset