நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கத்தியால் குத்தப்பட்ட மாணவரின் புகைப்படங்கள் பகிரப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: எம்சிஎம்சி எச்சரிக்கை

சைபர்ஜெயா:

கத்தியால் குத்தப்பட்ட மாணவரின் புகைப்படங்கள் பகிரப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

எம்சிஎம்சி எனும் மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் எச்சரித்துள்ளது.

நேற்று பண்டார் உத்தாமாவில் உள்ள ஒரு இடைநிலைப் பள்ளியில் மாணவி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பரப்புபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்.

குடும்பத்தின் உணர்திறனைப் பாதுகாக்கவும், போலிசார் விசாரணையைப் பாதிக்காத வகையில் பாதிக்கப்பட்டவர், பிற மாணவர்கள் அல்லது சம்பவம் நடந்த இடம் இடம்பெறும் எந்தவொரு உள்ளடக்கத்தையும் பரப்ப வேண்டாம் என்றும் ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர், பிற மாணவர்கள் அல்லது சம்பவம் நடந்த இடத்தைக் காட்டும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் உட்பட எந்தவொரு உள்ளடக்கத்தையும் பகிரவோ, மறுபதிவு செய்யவோ அல்லது பதிவேற்றவோ கூடாது.
அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று எம்சிஎம்சி கேட்டுக் கொள்கிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset