
செய்திகள் மலேசியா
இந்திய சமுதாயத்தின் நலனுக்காக மித்ராவின் கீழ் 6 திட்டங்கள்; பிரதமர் ஒப்புதல் வழங்கினார்: டத்தோஸ்ரீ ரமணன்
கோலாலம்பூர்:
இந்திய சமுதாயத்தின் நலனுக்காக மித்ராவின் கீழ் 6 திட்டங்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சரும் மித்ரா நடவடிக்கை குழுத் தலைவருமான டத்தோஸ்ரீ ரமணன் ராமக்கிருஷ்ணன் இதனை கூறினார்.
இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக மித்ராவின் கீழ் 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந் நிதியின் கீழ் பல திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.
அவ்வகையில் தமிழ்ப்பள்ளி சீரமைப்பு பழுது பார்க்கும் நடவடிக்கைகளுக்காக 12.8 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி கிட்டத்தட்ட 173 தமிழ்ப்பள்ளிகளுக்கு இந்நிதி பகிர்ந்தளிக்கப்படும்.
இரண்டாவது, ஆலயங்களுக்கான தர்ம மடானி திட்டத்திற்கு பிரதமர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
கிட்டத்தட்ட 1000 ஆலயங்களுக்கு தலா 20,000 ரிங்கிட் வழங்கப்படவுள்ளது.
இந்த 20,000 ரிங்கிட்டில் 10 சதவீதம் ஆலய பராமரிப்பு பணிகளுக்கு பயன்படுத்தலாம்.
90 சதவீத நிதி முழுமையாக மக்கள் பயன் பெறும் திட்டங்களுக்காக பயன்படுத்த வேண்டும்.
குறிப்பாக அதன் முழு அறிக்கை மித்ராவுக்கு அனுப்பப்பட வேண்டும்.
இதற்கான விண்ணப்பம் வரும் வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு தொடங்கி நவம்பர் மாதம் வரை திறந்திருக்கும் என்று அவர் கூறினார்.
கல்வி மடானி திட்டத்தின்கீழ் 8 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஐசியூ கீழ் கிட்டத்தட்ட 200 தமிழ்ப்பள்ளிகளுக்கு டியூசன் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது.
இதில் கல்வியில் பின் தங்கிய மாணவர்கள் அதிகம் இருக்கும் பள்ளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இதனை அரசு, தனியார் பல்கலைக்கழகங்களில் நுழையும் 3,000 மாணவர்களுக்கு புதிய மடிக்கணினி வழங்கப்படவுள்ளது.
உண்மையான வசதிக் குறைந்த மாணவர்களுக்கு இந்த மடிக்கண்னி வழங்கப்படவுள்ளது.
கடந்த காலங்களில் புதுபிக்கப்பட்ட மடிக்கணினிகள் வழங்கப்பட்டன என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
ஆக இம் முறை புதிய மடிக்கணினிகள் வழங்கப்படும்.
இந்திய சமுதாயத்தின் ஏழ்மையை குறைக்க 3.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
பேங்க் சிம்பானான் நேஷனல் கீழ் கிட்டத்தட்ட 1064 குடும்பங்களுக்கு மாதம் 300 ரிங்கிட் வழங்கப்படும்.
அரசு, தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்காக 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் புதுமுக மாணவர்களுக்கு தலா 2000 ரிங்கிட் வழங்கப்படும்.
குறிப்பாக உடல் பேறுகுறைந்த மாணவர்களுக்கு 3,000 ரிங்கிட் கொடுக்கப்படும்.
ஆக மொத்தத்தில் இந்திய சமுதாயத்தின் நலனுக்காகவே இத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்காகவே மேற்கொள்ளப்படவுள்ளது என்று டத்தோ ஸ்ரீ ரமணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 15, 2025, 5:49 pm
ராப்பர் கேப்ரைஸுக்கு எதிராக தொழிலதிபரின் இடை தரப்பினர் தடை உத்தரவை உயர் நீதிமன்றம் வழங்கியது
October 15, 2025, 4:01 pm
யாருடைய பதவியையும் நான் தட்டி பறிக்கவில்லை; மித்ராவுக்கு மீண்டும் தலைமையேற்றார் டத்தோஸ்ரீ ரமணன்
October 15, 2025, 12:43 pm
மாணவி கத்தியால் குத்தப்பட்ட வழக்கில் விசாரணைக்கு உதவுவதற்காக மாணவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்
October 15, 2025, 12:01 pm
மாணவி கத்திக்குத்து வழக்கு; பள்ளிகளில் வன்முறை அதிகரித்து வருவது கவலையளிக்கிறது: டத்தோ சிவக்குமார்
October 15, 2025, 10:43 am
மாணவியைக் கத்தியால் குத்திக் கொன்ற சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என நம்பப்படுகிறது
October 15, 2025, 10:42 am