
செய்திகள் மலேசியா
மாணவி கத்தியால் குத்தப்பட்ட வழக்கில் விசாரணைக்கு உதவுவதற்காக மாணவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்
பெட்டாலிங்ஜெயா:
மாணவி கத்தியால் குத்தப்பட்ட வழக்கில் விசாரணைக்கு உதவுவதற்காக மாணவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமாவில் உள்ள ஒரு இடைநிலைப் பள்ளியில் நேற்று 16 வயது மாணவி கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக 14 வயது ஆண் மாணவர் ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலிசாரின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஷாரில் அனுவர் அஹ்மது முஸ்தபா, தடுப்பு உத்தரவைப் பிறப்பித்தார்.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் விசாரணையில் உதவுவதற்காக படிவம் ஒன்று மாணவர் அடுத்த செவ்வாய்க்கிழமை வரை காவலில் வைக்கப்பட்டார்.
வழக்கு விசாரணையில், வழக்கறிஞர் அனுவர் எசாத் பிரதிநிதித்துவப்படுத்தும் சந்தேக நபர் ஆரஞ்சு நிற லாக்கப் சட்டை அணிந்திருந்தார்.
இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக சந்தேக நபர் வேறு வழியில் அழைத்து வரப்பட்டதாக தெரியவந்தபோது, நீதிமன்ற வளாகத்தில் அவரைக் காணவில்லை.
நேற்று காலை 9.10 மணியளவில் நடந்த சம்பவத்தில், பள்ளிப் பகுதியில் பாதிக்கப்பட்டவர் உடலில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 15, 2025, 5:49 pm
ராப்பர் கேப்ரைஸுக்கு எதிராக தொழிலதிபரின் இடை தரப்பினர் தடை உத்தரவை உயர் நீதிமன்றம் வழங்கியது
October 15, 2025, 4:01 pm
யாருடைய பதவியையும் நான் தட்டி பறிக்கவில்லை; மித்ராவுக்கு மீண்டும் தலைமையேற்றார் டத்தோஸ்ரீ ரமணன்
October 15, 2025, 1:44 pm
இந்திய சமுதாயத்தின் நலனுக்காக மித்ராவின் கீழ் 6 திட்டங்கள்; பிரதமர் ஒப்புதல் வழங்கினார்: டத்தோஸ்ரீ ரமணன்
October 15, 2025, 12:01 pm
மாணவி கத்திக்குத்து வழக்கு; பள்ளிகளில் வன்முறை அதிகரித்து வருவது கவலையளிக்கிறது: டத்தோ சிவக்குமார்
October 15, 2025, 10:43 am
மாணவியைக் கத்தியால் குத்திக் கொன்ற சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என நம்பப்படுகிறது
October 15, 2025, 10:42 am