நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாணவியைக் கத்தியால் குத்திக் கொன்ற சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என நம்பப்படுகிறது

கோலாலம்பூர்:

மாணவியைக் கத்தியால் குத்திக் கொன்ற சந்தேக நபர்  மனநலம் பாதிக்கப்பட்டவர் என நம்பப்படுகிறது.

கல்வி இயக்குநர் டாக்டர் முகமட் அசாம் அகமது இதனை கூறினார்.

சிலாங்கூரில் உள்ள ஒரு பள்ளியில் நான்காம் படிவ மாணவியை கத்தியால் குத்திய சந்தேக நபருக்கு மனநலப் பிரச்சினைகள் இருப்பதாக  கூறப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தும் பொறுப்பை மலேசிய கல்வி அமைச்சு போலிசாரிடம் ஒப்படைத்துள்ளது.

இந்த துயர சம்பவம் தொடர்பான அனைத்து அம்சங்களையும் விசாரிக்க போலிஸ் துறைக்கு அமைச்சு முழு நம்பிக்கை அளித்துள்ளது.

இந்த விஷயம் இன்னும் போலிசார் விசாரணையில் உள்ளது.

மேலும் அதை நாங்கள் முழுமையாக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளோம்.

போலிசார் விரிவான விசாரணை நடத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.

மேலும் பள்ளிகள் தொடர்ந்து பாதுகாப்பான பகுதிகளாக இருப்பதை உறுதி செய்வதற்கான கூடுதல் நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க அவர்கள் கல்வியமைச்சுடன் இணைந்து செயல்படுவார்கள்  என்று அவர் புத்ராஜெயாவில் நடந்த சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset